Monday, November 10, 2008

நாங்கள் ஏழைகள்...?

நாங்கள், வாழ்க்கையை பொழுதுபோக்காய்
வாழ்பவர் மத்தியில், அரை வயிறு கஞ்சிக்காய்
முழு பொழுது உழைப்பவர்கள்

பிறக்கும்போதே ஏழ்மை எனும் தாயால்
தத்தேடுக்கபட்டவர்கள்...

ஒட்டிய வயிறும், உலர்ந்த நெஞ்சும்
எங்களின் அடையாளங்கள்..

வீரணம் நீர் குழாய்களும், கூவம் நதிக்கரையும்
எங்களின் மாட மாளிகைகள்..

குனிந்து குனிந்தே கூனல் விழுந்த எங்கள்
முதுகு தண்டுகளுக்கு, நிமிர்ந்து பார்க்கவும் நேரம் பிடிக்கிறது..

இந்தியா முன்னேற கனவு காணுங்கள் என்று கூறும்
அப்துல் கலாம் அவர்களுக்கு எப்படி சொல்வது
எங்களின் நீண்ட ஆண்டு கனவு "முழு வயிறு காஞ்சி"
தான் என்பதை...

"ஒரு தேர்தலுக்கு ஒரு முறை தான் ஓட்டு போடனுமா?"
கையில் கிடைக்கும் ஐம்பது ரூபாய்க்காய் அலைகிறது மனசு..

இந்த பூமியில் தண்ணீர் உலர்ந்தாலும்
எங்களின் கண்களில் கண்ணீர் குறைந்ததில்லை..

ஆதலால் நாங்கள் ஏழைகள்

No comments: