Thursday, May 29, 2008

நான் பேசுகிறேன்

1. நான் பேசுகிறேன்
நறுக்கப்படுகிறது என் நாவு
முகம் இழக்கின்றன என் சொற்கள்

இன்னும் நான் பேசுகிறேன்
பறிக்கப்படுகிறது என் பேனா
கருச்சிதைகின்றன என் சொற்கள்

ஆயினும் நான் பேசுகிறேன்
முறிக்கப்படுகின்றன என் விரல்கள்
விசையிழக்கின்றன என் சொற்கள்

மேலும் நான் பேசுகிறேன்
பிடுங்கப்படுகின்றன என் கண்கள்
உயிர் இழக்கின்றன என் சொற்கள்

பின்னும் நான் பேசுகிறேன்
உயிர் விடைக்க
என் உடலே சொல்லாய் எழுகிறது

பேசாவிடில்
நான் சாவேன்

*அழகிய பெரியவன் *

நட்பு

1.பிரிந்தென்னை
சிலுவையில்
அறைந்துபோனாய்
உயிர்த்தெழுகின்றன உன்
ஞாபகங்கள்...


2. புள்ளியாக நீ
மறையும் வரையில்
நின்றழுதேன்.
புள்ளியில்லாக் கோலமாக
மாறிப்போனது
நம் நட்பு.

3.நண்பர்கள் பிரியும்
பொழுதெல்லாம் அழுகிறான்
இறைவன்,
மழையுருவில்.


4.காரணமின்றி பிரிதலும்
பின்னுணர்ந்து தோள்சேர்தலும்
நட்பில் மட்டுமே
சாத்தியம்.


5.தினம் திட்டும் அப்பாவின்
வார்த்தைகளைவிட
திட்டாமல நகரும்
நண்பனின் மெளனம்
கொடியது.

தெரியுமா

திருப்பதியில் வெங்கடாசலபதி என்ற ஒரு சாமி இருக்கிறது; அதற்கு ஏழுமலையான் என்ற பெயரும் உண்டு. அதன் நெற்றியில் நெடு நாமம் சாத்தப்பட்டு இருக்கும். எத்தனைக் கோடி மக்களுக்கு இந்தக் கல் முதலாளி நாமம் சாத்தியிருந்தால் அந்தக் கோவிலுக்கு ரூ.7,500 கோடி சொத்து சேர்ந்திருக்கும். `இந்தியா டுடே’ இந்தக் கோயிலின் சொத்துக் கணக்கைத் தோராயமாகச் சொல்லியிருக்கிறது.

நிலம் ரூ.15,000 கோடி.
கட்டடங்கள் ரூ.1,500 கோடி.
நகைகள் ரூ.30,000 கோடி.
நிதி ரூ.20,000 கோடி.

கடல் மட்டத்திலிருந்து 3,200 அடி உயரத்தில் 10.33 சதுர மைல்கள் பரப்பளவில் இந்தக் கோயில் எழுப்பப்பட்டு இருக்கிறது.நாள் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் உண்டியல் வசூலாம். இந்த மாதம் வரை இந்த ஆண்டில் மட்டும் கோயில் வருமானம் ரூ.900 கோடி. லட்டு வியாபாரம் மூலமும் லட்டாய் பணம் குவிகிறது. கொஞ்சம் தான் ரூ.28 கோடி.

பாகப்பிரிவினை

அப்பன் சேர்த்துவைத்திருந்த
அஞ்சரை ஏக்கர் நிலத்தையும்
60 பவுன் நகைகளையும்
கௌரவம் குலையாமல்
பிரித்துக்கொண்ட பிள்ளைகளுக்கு
அம்மாவை என்ன செய்வதென
தெரியவில்லை

குத்திக் காட்டியது - என் தமிழ்

தாத்தாவின் மூக்குக் கண்ணாடி
கை தவறி விழும் முன் சொன்னேன்
‘Sorry ‘ தாத்தா என்று …!
தூங்கும் போது கழுத்து வரை
போர்த்தி விடும் கருணை - தூக்கத்திலும் சொல்வேன்
‘Thanks ‘ ம்மா என்று …!
நாளை நண்பனின் பிறந்த நாள் - இன்றே
வாழ்த்து அட்டையில் எழுதினேன்
‘Happy Birthday da’ என்று …!
காலையில் நாளிதழ் படிக்கும் பொழுது எதிர் வீட்டுக்காரர்
அவர் சொல்லும் முன் முந்திக் கொள்வேன்
‘Good Morning Uncle’ என்று …!
கோயிலில் பத்தாம் வகுப்பு சிநேகிதி கணவனுடன்
அவள் பேசும் முன் முடித்துக் கொள்வேன்
‘Hai’ என்று …!
மாலையில் கடற்கரையில் என்னவள் - மணலில்
அவள் விரல் பிடித்தே எழுதுவேன்
‘I Love You’ என்று …!
இரவில் …
வீட்டிற்கு செல்லும் வழியில் - காலை
குத்தியது முள் …
‘அம்மா’ என்று அலறினேன்
குத்தியது முள்ளில்லை - என்னை
குத்திக் காட்டியது - என் தமிழ்

நட்பின் உன்னதம

புரண்டு புரண்டு
படுக்கிறேன்.
தூக்கமே வரவில்லை.
எங்கே போய் தொலைந்தது
என தேடிக்கொண்டிருந்தேன்.
அட உன் நினைவுகளோடு
தூக்கத்தை தேடுவது
மெது மெதுவாக
புரிந்தது எனக்கு.

தூக்கமே வரவில்லையா?!
உன் நினைவால் தான்
தூக்கம் தொலைந்ததா?!
தூக்கம் வரவில்லையே
என நினைத்த எனக்குள்
உன் ஞாபகம் வந்து
ஒட்டிக்கொண்டதா?!

விடை தேட முயன்றேன்.
விடையாக விரிந்தது மனதில்.

தூக்கம் வரவில்லையே
என நினைத்த எனக்குள்
உன் ஞாபகம் வந்து
எனக்குத் துணையாக
புகுந்து கொண்டது.

இது தான் நட்பின் உன்னதம்.
இப்படியான ஒரு இன்ப அனுபவத்தை
எத்தனை பேர் உணர்ந்திருப்பர்.!

வணக்கம்

உனக்கென்று என்னிடம் என்ன இருக்கிறது...
இந்த நாளினைத் தவிர.....!
ஒவ்வொரு நாளும்
போராட்டங்கள்.. புதிது புதிதாய்..
வெற்றி தோல்வியாய்..
வடுக்கள்.. மனது முழுக்க..
மறுபடி மறுபடியாய்..
மனிதம் கொண்டு போராட...
என்னோடு சிலர்..
எனக்காக சிலர்..
நம்பிக்கைகளாய்...

நன்றியுடன்.. கட்டியம் சொல்கிறேன்..
காயம் மறந்து..
இன்றுமாய்..