Monday, June 9, 2008

தத்துவக் கோழி

எங்கள் வீட்டு
வான்கோழி
பிறக்கவுமில்லை
இறக்கவுமில்லை
கடைசி வரைபறக்கவுமில்லை!

குற்றவாளி


அனலில் ஊறிய அறைகளுள்
இயலாமையுடன்
கைவிரித்துச் சுழல்கின்றன மின்விசிறிகள்.
வேம்பும் கருகிய வெளியை
உற்றுநோக்கி இருப்பவளின் கண்ணில்
எம்மரத்தின் இலையும் தளதளப்பும்
இக்கணம் அசைகிறதோ…!

அன்பின் நீரூற்றுகள்
மதவியாபாரிகளின் உதடுகளிலிருந்து
மட்டுமே பீறிடுகின்றன.

நவத்துவாரங்களிலும் தூசி இறைத்தபடி
வாகனங்கள் வெறிகொண்டலையும் வீதியோரம்
விழுந்து சுருண்டிருக்கும்
கிழவனைப் புறக்கணித்து

எலக்ரோனிக் அடிமைகளை
ஏற்றிச்செல்கின்றன
சொகுசுப் பேருந்துகள்.


தண்ணீர் தேடியலைகின்றன

கால்களுக்கிடையில் வால்நுழைத்து
எச்சில் இழையொழுகும் நாய்கள்.
எழுதியிருக்க வேண்டிய
அனைத்து வார்த்தைகளையும்
இரக்கமற்றுத் திருடிவிட்டது கோடை.

இத்தனை கொலை செய்தும்
இன்னமும்
வெளியிற்தான் திரிந்துகொண்டிருக்கிறது
வெயில்!

கோடை மழை

இரத்தம் உறிஞ்சி
பளபளக்கும் உடலோடு
கழன்றுவிழுகின்றன உறவட்டைகள்...

எழுதுமேசையில்
திகிலுறுத்தும் கட்டணக்காகிதங்கள்
முதல்தேதியை முரசறைவித்தபடி...

மண்டைக்குள்
சிலந்திவலை படருமிக்காலம்
வாக்குறுதி மீறுகிறேன்
வாய்திறக்கவியலாத புத்தகங்களே!
மன்னித்துவிடுங்கள்.

கோடை தீங்கங்குகளோடு வருகிறது
அறைச்சுவர்கள் அக்கினித்தகடுகள்
நீ உவமித்தபடி
ஒரு அகதியின் கழிவிரக்கத்தை நினைவுறுத்திச்
சதா கரைந்துருகும் மின்விசிறி.

வீதியில் இறங்குகிறேன்
மாந்தளிர் விரலசைத்து
சின்னக்குமிழ் வாயால்
எச்சில் நூலிழையசெல்லமே!
நீ சிரித்துவிட்டுப்போகிறாய்.

மழையற்றும் குளிர்கிறது மண்.

சிரிப்பு

பூ மலர்ந்தால்
பூவுக்கு அழகு
நீ சிரித்தால்
உன்
முகத்திற்கு அழகு!

ஆனால்
நீ ஏன்
சிரிப்பதில்லை!

சிரிப்பும்
சில நேரம்
சீரழித்து விடும்!

நரிகளிடம்
முறைப்பு
நல்லதோர்காப்பு!

ஆன்மாவில்
வெளிப்படும்
அந்த
அழகிய சிரிப்பு
அன்பின் சிகரம்
அதுவே
சொர்க்கதிதின்
வாசல்!

ஆனால்
வியாபார உலகில்
விதவிதமான
சிரிப்புக்கள்!
வேசம் போடும்
முகங்களைப்போல!

அவள் சிரித்தாலும்
அழகுதான்
அதுவே
ஆபத்தாகவும்
முடியும்!

எங்கே
எப்படி
எதற்காக
எந்தக்கோணத்தில்
என்றுஅளந்து
சிரிக்கமுடியவில்லை
என்னால்!

சிரிப்பு
அது
புனிதமானது!

நட்பு...

மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்கஒரு நட்பு...

குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாடஒரு நட்பு...

காளைப் பருவத்தில்
ஊர் சுற்றஒரு நட்பு...

வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்கஒரு நட்பு...

முதிர்ந்த பின்அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ளஒரு நட்பு...

நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...

தேவையின் போது
தோள்களில் சாயநட்பு வேண்டும்...

துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்கநட்பு வேண்டும்...

மகிழ்ச்சியின் போது
மனம் மகிழநட்பு வேண்டும்...

நானாக நானிருக்கநட்பே...
நீ எனக்குநட்பாக வேண்டும்

நட்பை தவிர வேறோன்றிமில்லை !

இது ஒரு அழகிய உலகம் ..
இங்குள்ள மலர்கள் அனைத்தும்
புன்னகை பூக்கும் ...
மனம் என்னும் பட்டாம் பூச்சிகள்
ஆனந்ததில் படபடக்கும் ..
பச்சை புல்வெளிகள் அனைத்தும்
பசுமையான நினைவுகள்...
நட்பு என்ற தென்றலால்
சிலு சிலுக்கும் ...
ஆம் இது
"நட்பினால் இணைந்த ஒரு அழகிய உலகம் "...

கடைசி நிமிடங்கள்

எத்தனை கடைசி நிமிடங்கள் நாம் வாழ்வில்

பரீட்சையில் கடைசி நிமிஷத்தில்
ஞாபகம் வரும் விடைகள் ,

சொல்லலாமா வேண்டாமா என்று அலைபாயும் அவன் மனசு
அவள் செல்லும் முன் கடைசி நிமிஷத்தில் சொன்ன காதல் ,

கை ஏந்தும் ஒரு பெரியவருக்காக தேடும் ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் கடைசி நிமிஷத்தில் தரும் 5 ரூபாய் ,

காலையில் அவசரத்தில் கிளம்பும் போது கடைசி நிமிஷத்தில் வைத்த பொட்டு ,

இது தப்பு அது தப்பு என்று குழந்தையை திட்டிய பின் கடைசி நிமிஷத்தில் குழந்தைக்கு தந்த முத்தம் ,

வாழ்கையில் கடைசி நிமிஷத்தில் புரிய வரும் சில உறவுகள் ,

சில கடைசி நிமிடங்கள் கடைசியாய் போகும் ,

சில கடைசி நிமிடங்கள் புது வாழ்க்கையை தரும்...