Wednesday, November 5, 2008

நேசங்கள் விற்பனைக்கில்லை

ஒரு நிசப்த இரவிவினில்
கண்ணயர்ந்த வேளையிலே.......
மேலிருந்து வானங்கள் திறக்க‌
என் அறை முழுதும்
பணக் கற்றைகளால் நிரம்பியது....

விழிகள் முழுதும் அகல.......
கதவுகள் திறந்து வெளி ஓடினேன்......
மனம் முழுதும் கொள்ளை மகிழ்ச்சியாய்
அந்த பணக் கற்றைகளோடு...........

சில நேரக் களியாட்டங்கள்......
சில நேரப் பொழுதுபோக்குகள்........
சில நேர இன்பங்கள்..........
பாதி பணக் கற்றைகள்
தீர்ந்த பின்னே............
மெல்லமாய் வெறுமையின் பிடிகள்
மனதை இறுக்க‌......,
தனிமைச் சிறகுகள் விரிந்து கொண்டன......

வெறுமையின் பிடிகளை வெட்டித் தள்ள....
இருந்த பணக் கற்றைகள் எல்லாம் கொண்டு...
என் மேல் பரிவுகள் கொள்ள
சில மனங்களை வாங்க முயற்சித்தேன்........

இருந்த நல்ல மனங்கள் எல்லாம்
விலைக்கு வர மறுத்தன...........
விலைக்கு வந்த கள்ள மனங்களை
எல்லாம் என் மனம் வாங்க மறுத்தது...........

போதி மரத்து கௌதமனாய்
சில உண்மைகள்
நிச்சயமாய் எனக்கு புரிந்து போயிற்று......

நேசங்கள் இன்னும் மலிந்து விடவில்லை
இந்த உலகத்தில்..........
எத்தனை பணங்கள் இருந்தாலும்
நேசங்கள் இங்கு விற்பனைக்கில்லை என்பது.......

கண்கள் திறந்த பொழுது.......
தூரத்தில் ஒலித்தது
அம்மாவின் குரல்..........
".தூங்காம.....காப்பி குடிச்சிட்டு ...,படிடா கண்ணா..."

இர.குமார்.

No comments: