1. நான் பேசுகிறேன்
நறுக்கப்படுகிறது என் நாவு
முகம் இழக்கின்றன என் சொற்கள்
இன்னும் நான் பேசுகிறேன்
பறிக்கப்படுகிறது என் பேனா
கருச்சிதைகின்றன என் சொற்கள்
ஆயினும் நான் பேசுகிறேன்
முறிக்கப்படுகின்றன என் விரல்கள்
விசையிழக்கின்றன என் சொற்கள்
மேலும் நான் பேசுகிறேன்
பிடுங்கப்படுகின்றன என் கண்கள்
உயிர் இழக்கின்றன என் சொற்கள்
பின்னும் நான் பேசுகிறேன்
உயிர் விடைக்க
என் உடலே சொல்லாய் எழுகிறது
பேசாவிடில்
நான் சாவேன்
*அழகிய பெரியவன் *
Thursday, May 29, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நல்ல பதிவுகள்..வாசிக்கும் போதே அதன்
அர்த்தம் விழங்கிப்போவது எனக்கு குறைவு
ஆனால் இது நன்றாக பிடித்து விட்டது.....
இவ்வலைப்பதிவு குடும்பம் உங்களை
வரவேற்கிறது....சின்னச் சின்னதா இருந்தாலும்
சிறப்பா இருக்கி.......
Post a Comment