Tuesday, December 30, 2008

நான் வேண்டும் வரங்கள்

ஜன்னலோர படுக்கை
தினம் தினம் பௌர்ணமி
அதிகாலை பனித்துளி
சாலையோர பூக்கள்
நினைத்தவுடன் மழை
கள்ளமில்லா சிரிப்பு
பொய் இல்ல நட்பு
தினம் நூறு கவிதைகள்
மீண்டும் ஒரு பாரதி
மனிதம் உள்ள மனிதர்கள்
பணம் அல்ல பாசம்
இரவு நேர மெல்லிசை
தோள் சாய தோழன்
தலை கோதக் காதலி
தாய்மடி தூக்கம்
துக்கத்தில் மரணம்

Monday, November 10, 2008

என்னுள் நீ!!!

மழைக்காலங்களில்
மரங்களில் ஒளிந்திருக்கும்
மழைத்துளிகளை
அம்பலப்படுத்தும்
காற்றைப்போல்
என்னுள்
ஒளிந்திருக்கும்
காதலை
அம்பலப் படித்திவிடுகிறது
என்னை கடந்துசெல்லும்
உன் சுவாசம்!!!!
*********************
உன்னை
சந்திக்கும் வரை
உன்னை யார்யென்றே
தெரியாது
உன்னை
சந்தித்த பின்பு
உன்னைத் தவிர
எனக்கு
யாரையும்
தெரியவில்லை!!!!!!
*********************
இருள் சூழ்ந்த
அறையின்
சிறு துவாரம்
வழியாய்
பரவும் வெளிச்சமாய்
என்னில் பரவுகிறாய்
காதலாய்!!!
*********************
ஊடல் கணங்களில்
என்ன பேசுவதென்று
தெரியாமல்
வார்த்தைகள் தத்தளிக்கும் போது
சலனமே இல்லாமல்
பேசத்தொடங்கி விடுகின்றன
நம் விரல்கள்!!!
*********************
என்னை
தூங்கச் சொல்லிவிட்டு
நம் கைப்பேசி
உரையாடலை
முடித்துவைத்தாய்
உன்முத்த சத்தங்களோ
என் தூக்கத்தோடுதான்
விளையாடுவேன்
என்று
அடம் பிடிக்கிறது!!!!

நாங்கள் ஏழைகள்...?

நாங்கள், வாழ்க்கையை பொழுதுபோக்காய்
வாழ்பவர் மத்தியில், அரை வயிறு கஞ்சிக்காய்
முழு பொழுது உழைப்பவர்கள்

பிறக்கும்போதே ஏழ்மை எனும் தாயால்
தத்தேடுக்கபட்டவர்கள்...

ஒட்டிய வயிறும், உலர்ந்த நெஞ்சும்
எங்களின் அடையாளங்கள்..

வீரணம் நீர் குழாய்களும், கூவம் நதிக்கரையும்
எங்களின் மாட மாளிகைகள்..

குனிந்து குனிந்தே கூனல் விழுந்த எங்கள்
முதுகு தண்டுகளுக்கு, நிமிர்ந்து பார்க்கவும் நேரம் பிடிக்கிறது..

இந்தியா முன்னேற கனவு காணுங்கள் என்று கூறும்
அப்துல் கலாம் அவர்களுக்கு எப்படி சொல்வது
எங்களின் நீண்ட ஆண்டு கனவு "முழு வயிறு காஞ்சி"
தான் என்பதை...

"ஒரு தேர்தலுக்கு ஒரு முறை தான் ஓட்டு போடனுமா?"
கையில் கிடைக்கும் ஐம்பது ரூபாய்க்காய் அலைகிறது மனசு..

இந்த பூமியில் தண்ணீர் உலர்ந்தாலும்
எங்களின் கண்களில் கண்ணீர் குறைந்ததில்லை..

ஆதலால் நாங்கள் ஏழைகள்

Wednesday, November 5, 2008

தமிழே வாழ்க!

ஊரில் தமிழன் மார்பைத் தட்டிப்
பாரில் தமிழன் நானே என்னும்
சீரைத் தந்த தமிழே வாழ்க!
ஓரா உலகின் ஒளியே வாழ்க!

விதையாக விழ வேண்டும்

வாழும் போது மரமாக வாழவேண்டும்
அடுத்தவர்களுக்கு நிழல் தர
வீழும் போது விதையாக விழ வேண்டும்
அடுத்த தலைமுறைக்கு மரமாக!

இன்பத்தமிழ்

தமிழுக்கும் அமுதென்று பேர்!
அந்தத்தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்!
இன்பத்தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்!
இன்பத்தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர்!
இன்பத்தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்!
இன்பத்தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்!
இன்பத்தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்!
இன்பத்தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்!
இன்பத்தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!

நட்பு

நட்பு என்பது தேன்கூடு!
களையாதிருக்கும் வரை..
நட்பு என்பது கண்ணாடி!
உடையாதிருக்கும் வரை..
நட்பு என்பது பூந்தோட்டம்!
வாடாதிருக்கும் வரை..
நட்பு என்பது காற்றாடி!
சுழன்று கொண்டிருக்கும் வரை..
நட்பு என்பது உயிர்நாடி!
நான் உயிரோடிருக்கும் வரை